மதுபானம் தொடர்பான வர்த்தமானிகள் நீக்கம் | தினகரன்

மதுபானம் தொடர்பான வர்த்தமானிகள் நீக்கம்

 

மதுபான கொள்வனவு மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணி புரிவது தொடர்பில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை தளர்வு மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீள பெறப்பட்டுள்ளன.

நிதியமைச்சினால் இன்று (18) விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, மதுபான உற்பத்தி செய்கின்ற, விற்பனை செய்கின்ற இடங்களில் பெண்கள் பணிபுரிவது மற்றும் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்தல் தொடர்பில் இருந்த தடையை நீக்குவதாக கடந்த வாரம் (10) வெளியிட்ட, மதுவரி வர்த்தமானியை நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இன்று (18) மீளப்பெற்றுள்ளார்.

அதே போன்று மதுபானசாலைகள் திறக்கும் நேரத்தை நீடிப்பது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (11) வெளியிட்ட வர்த்மானியையும் அவர் இன்று (18) மீளப் பெற்றுள்ளார்.

குறித்த இரு வர்த்தமானிகளையும் மீளப்பெறும் அறிவிப்பைக் கொண்ட 03/2018 மற்றும் 04/2018 ஆகிய மதுவரி அறிவித்தலை உள்ளடக்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கையொப்பமிட்டுள்ளதாக நிதியமைச்சின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 


There is 1 Comment

Arasangam matumanam nebfaddavandum

Add new comment

Or log in with...