2018 பட்ஜட் இன்று | தினகரன்

2018 பட்ஜட் இன்று

 

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் இன்று (09) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவுசெலவுத்திட்டத்தை முன்வைக்கின்றார்.

இன்று பி.ப. 3.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், அமைச்சர் மங்கள சமரவீர வரவு-செலவுத்திட்டத்தை முன்வைப்பார். நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் இவர் முன்வைக்கும் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இதுவாகும். வரவு செலவுத்திட்ட முன்மொழிவு உரை சுமார் இரு மணி நேரங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர பத்துக்கும் அதிகமான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளின் வரியைக் குறைப்பதாக அறிவித்திருந்தார்.

வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்து மங்கள சமரவீர உரையாற்றியதும், நாளை வெள்ளிக்கிழமை முதல் வரவுசெலவுத்திட்டத்தின் விவாதம் ஆரம்பமாகும். நாளை ஆரம்பமாகும் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் (16) வரை தொடரும். 16ஆம் திகதி மாலை இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து 17ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் (09) வரை குழுநிலை விவாதம் நடைபெறும். டிசம்பர் (09) மாலை மூன்றாவது விவாதம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும்.

வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

 

 


Add new comment

Or log in with...