Friday, August 18, 2017 - 10:58am
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன மீண்டும் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நேற்றைய திகதியிடப்பட்ட (17) விசேட வர்த்தமானி ஒன்று மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, அவரது அமைச்சின் கீழ் குறித்த லொத்தர் சபைகள் இரண்டையும் கொண்டுவந்திருந்தார்.
ஆயினும் அண்மையில், ரவி கருணாநாயக்க நிதியமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்தததை அடுத்து, குறித்த லொத்தர் சபைகள் இரண்டும் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன.
கடந்த வாரம் (10) வெளிவிவகார அமைச்சு பதவியை ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்ததை அடுத்து, நிதியமைச்சின் கீழ் குறித்த விடயங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment