இறக்குமதி அரிசிக்கான வரி ரூ. 5 ஆக குறைப்பு | தினகரன்

இறக்குமதி அரிசிக்கான வரி ரூ. 5 ஆக குறைப்பு

 
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 
இன்று நள்ளிரவு (28) முதல் குறித்த வரிக் குறைப்பு அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
 
இறக்குமதி செய்யப்படும் அரசியின் ஒரு கிலோ கிராமிற்கு வரியாக ரூபா 15 அறவிடப்பட்டு வந்த நிலையில் குறித்த வரி ரூபா 10 இனால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
சந்தையில் அரிசி தட்டுப்பாட்டை தடுக்கவும், அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
 

Add new comment

Or log in with...