இஸ்ரேல் - எகிப்து இடையே 15 பில். டொலர் உடன்படிக்கை | தினகரன்

இஸ்ரேல் - எகிப்து இடையே 15 பில். டொலர் உடன்படிக்கை

 

இஸ்ரேலின் டெலெக் டிரில்லிங் நிறுவனம் எகிப்துக்கு 15 பில்லியன் டொலர் பெறுமதியான இயற்கை வாயுவை விநியோகிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இஸ்ரேலிய இயற்கை வாயு துறையில் மிகப்பெரிய ஏற்றுமதி ஒப்பந்தமாக இது உள்ளது.

இது ஒரு வரலாற்று உடன்படிக்கை என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு வரவேற்றுள்ளார். “இது நாட்டின் கருவூலத்திற்கு பில்லியன்களை கொண்டுவருகிறது” என்று நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை எமது பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகவும் அதேபோன்று பிராந்திய உறவை பலப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த இயற்கை வாயுவை எந்த பாதை ஊடாக விநியோகிப்பது என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை.

எகிப்தின் வடக்கு சினாய் ஊடாக இஸ்ரேல் வரை செல்லும் குழாய் வழியே இயற்கை வாயு விநியோகிக்கும் உடன்படிக்கை 2005 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டது. இந்த குழாய் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து உடன்படிக்கை கைவிடப்பட்டது.

எகிப்து 1979 ஆம் ஆண்டு முதல் அரபு நாடாக இஸ்ரேலோடு அமைதி உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டது. 


Add new comment

Or log in with...