மலேசிய பிரதமரை கேலிச்சித்திரமாக வரைந்தவருக்கு சிறை | தினகரன்

மலேசிய பிரதமரை கேலிச்சித்திரமாக வரைந்தவருக்கு சிறை

மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கைக் கோமாளிபோன்று கேலிச் சித்திரமாக வரைந்து வெளியிட்ட பிரபல ஓவியருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்த்தரப்புத் தொண்டரான ஓவியர்ஃபாஹ்மி ரேஸா மீது, இணையத்தில் இன்னொருவரைப் பாதிக்கும் பொய்யான, முறைகேடான பதிவைப் பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டது. பாஹ்மிக்கு 30,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

மலேசியா போலிச் செய்திகளைத் தடுக்கும் நோக்கில் அது தொடர்பான சட்டத்தைத் திருத்துவதற்கான திட்டங்களை அறிவித்திருந்தது. பாஹ்மியின் வழக்கறிஞர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார். பாஹ்மி மீது அதே போன்ற மேலும் ஒரு குற்றச்சாட்டு வேறொரு நீதிமன்றத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நஜிப்புக்கு எதிரான ஊழல் சர்ச்சை தொடர்பில் ஆர்ப்பாட்டம் செய்தோரில் அவரும் ஒருவர். 


Add new comment

Or log in with...