தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு | தினகரன்

தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு


வைத்தியசாலையில் வைத்து கணவன் பலி

தூங்கிக் கொண்டிருந்த கணவன் - மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 51 வயதான கணவர் பலியாகியுள்ளார்.

இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில், பலபத, தலங்கம தெற்கு பிரதேசத்தில் விமலதிஸ்ஸ வீதியிலுள்ள வீடொன்றில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அடையாளம் தெரியாத இருவராலேயே குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த வீட்டின் கதவை உடைத்து, வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர்கள் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பாரிய காயங்களுக்குள்ளான 51 வயது வர்ணகுலசூரிய மற்றும் அவரது 48 வயதான மனைவியும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கணவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், தலங்கம் பொலிசார் இது குறித்தான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...