Home » ஊவா மாகாணத்தில் புதிதாக 451 அதிபர்கள் நியமனம்

ஊவா மாகாணத்தில் புதிதாக 451 அதிபர்கள் நியமனம்

- ஆளுநர் தலைமையில் நிகழ்வு

by Prashahini
November 7, 2023 12:44 pm 0 comment

அதிபர் தரம் iii ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 451 புதிய அதிபர்களை, ஊவா மாகாண பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பிலான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் நேற்று (6) பதுளை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றிய பதில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்த அதிபர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியதோடு, அதில் சிங்கள மொழி மூலமும் 363 பேரும், தமிழ் மொழி மூலமும் 88 பேரும் அதிபர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டனர். இதற்கமைய நியமனம் பெற்ற புதிய அதிபர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் ஒருமாத விசேட பயிற்சிப் பட்டறை ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளதுடன். ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் பாடசாலைகளில் தமது கடமைகளை ஏற்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசனாயக, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய, ஊவா மாகாண பிரதம செயலாளர் தமயந்தி பரணகம, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் காமினி மஹிந்தபால ஜோபியஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT