அரசியல் நிலை குறித்து விவாதிக்க 3 மணி நேரம் ஒதுக்கீடு | தினகரன்

அரசியல் நிலை குறித்து விவாதிக்க 3 மணி நேரம் ஒதுக்கீடு

 

இரு முறை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின் முடிவு

காலை 10.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடியது.

ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி., தற்போது நிலவும் குழப்ப அரசியல் சூழல் தொடர்பில், 20 பேரின் கையெழுத்துடன், விசேட விவாதம் ஒன்றை நடாத்துவதற்கு அனுமதி கோரினார்.

இதனையடுத்து பாராளுமன்றம் 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதேவேளை, இன்று (19) காலை பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் இது குறித்து அறிவிக்கப்படவில்லை என, சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதனையடுத்தே, பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு குறித்த கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தைத் தொடர்ந்து, தற்போதைய அரசியல் நிலை குறித்து விவாதிக்க கட்சித் தலைவர்கள் இணங்கியதோடு, அதற்கான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை இன்று (19) பிற்பகல் 4.00 மணி முதல்  7.00 மணி வரையான 3 மணி நேரம் ஒதுக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...