Thursday, March 28, 2024
Home » நிகழ்நிலை காப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல

- ஒரு சில சரத்துகளை திருத்துவதன் மூலம் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்

by Rizwan Segu Mohideen
November 7, 2023 10:28 am 0 comment

– சவாலுக்குட்படுத்திய மனுக்கள் தள்ளுபடி

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online Safety Bill) அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை இன்றையதினம் (07) பாராளுமன்ற அமர்வின் போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்‌ஷ அறிவித்தார்.

சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சட்டமூலத்தின் ஒரு சில சரத்துக்களை திருத்திய பின்னர், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உயர் நீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் அறிவித்துள்ளது.

இதேவேளை, நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

அது இன்னும் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் பதியப்படவில்லை என்பதால் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, அஜித் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

SC-Determination-Online Safety Bill

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT