தம்பதியினர் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக இடம்பெற்றது | தினகரன்

தம்பதியினர் மீதான துப்பாக்கிச்சூடு தவறுதலாக இடம்பெற்றது

 

தலங்கம பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தவறுதலாக இடம்பெற்றுள்ளதென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் தங்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி மீது குறித்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சம்பவத்தில், 51 வயதான கணவர் உயிரிழந்ததோடு, அவரின் மனைவி (48) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தாக்குதல், பாதாள உலக தரப்பினருக்கிடையிலான மோதல் என தெரியவந்துள்ளதோடு, குறித்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டுடன் இணைந்த அறையொன்றில், வாடகைக்கு வசித்துவந்த, பாதாள குழுவொன்றின் தலைவனான, அங்கொடை லொக்கா என்பவரின் ஆதரவாளரை குறி வைத்து நடாத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிதாரிகள், குறிப்பிட்ட நபர் அந்த அறையில் தங்கியிருப்பதாக நினைத்து குறித்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர்களை கைது செய்ய, மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலங்கம பொலிசார் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...