தொடரும் அரசியல் இழுபறி! | தினகரன்

தொடரும் அரசியல் இழுபறி!

 

ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சந்திப்பு
பிரமர், ஜனாதிபதி விசேட அறிவித்தலுக்காக மக்கள் காத்திருப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் சந்திப்பை மேற்கொண்ட அவர்கள் குறித்த தீர்மானத்தை ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் தொடர்பில், தாங்கள் எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கப்ப போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு தெரிவித்ததாக, மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எம்.பி. தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தங்களுடைய ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அதில், கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து தினேஷ் குணவர்தன, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக களினிவௌி தொடரூந்து வீதி நாளை இரவு 8 மணி முதல் 19ம் திகதி அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றுமொரு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் அவர்கள், பல்வேறு கட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இன்றைய தினம் (16) தங்களது நிலைப்பாடு தொடர்பில் விசேட அறிவித்தலை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...