ஒப்சேவர்−மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் விருதுபெற்ற மூவர் இலங்கை அணியில் | தினகரன்

ஒப்சேவர்−மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் விருதுபெற்ற மூவர் இலங்கை அணியில்

இலங்கை தேசிய அணி, ஒப்சேவர் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் பிரதான விருதினை வென்றெடுத்த ஒரு சில வீரர்களின் சேவைகளை கடந்த நான்கு தசாப்த காலமாகப் பெற்றே வந்துள்ளன.

இலங்கை அணி கடந்த 1996 இல் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை ஏழு விக்கெட்டுக்களால் தோற்கடித்து சம்பியன் பட்டத்தை வென்றபோது அந்த அசைக்க முடியாத அணியில் களமிறங்கியிருந்த அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க, அசங்க குருசிங்க, ரொஷான் மகாநாம, குமார் தர்மசேன, முத்தையா முரளிதரன் மற்றும் ஆட்டத் தொடர் நாயகன் விருதைவென்றெடுத்திருந்த சனத் ஜயசூரிய ஆகிய அறுவரும் ஏற்கெனவெ ஒப்சேவர் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதினை தமாக்கியிருந்தவர்களாவார்

அதேபோன்று இலங்கையில் தற்போதைய தேசிய அணியையும் முன்னாள் ஒப்சேவர் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதிதனை வென்றிருந்த வீரர்களான தினேஸ் சந்திமால் (2009), நிரோஷன் டிக்வெல்ல (2012) குசல் மெண்டிஸ் (2013) ஆகிய மூவரும் அலங்கரித்து வருகின்றனர்.

இலங்கை அணிக்குபெருமை சேர்க்கும் விதத்தில் அவர்கள் மூவரும் தொடர்ந்தும் அணிக்கு கூட்டாகப் பலம் சேர்க்கும் வீரர்களாகவே தமது இடங்களைத் தக்க வைத்தும் வருகின்றனர்.

மேற்படி மூன்று வீரர்களுள் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் சந்திமால் கொழும்பு ஆனந்தா கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த 2009 ,ல் நடைபெற்ற ஒப்சேவர் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீர் விரதை வென்றதன் மூலம் மிக அனுபவம் வாய்ந்த வீரராகத் திகழ்கின்றார். முன்னாள் திரித்துவக் கல்லூரி அணித் தலைவராக விளங்கிய டிக்வெல்ல ஒப்சேவர் – மொபிடெல் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீர் விருதினை கடந்த 2012 இல் வென்றார் மொரட்டுவை பிரின்ஸ் ஒவ் வேல்ஸ் அணித் தலைவராக விளங்கிய குசல் மெண்டிஸ் திறமையுடன் விளையாடி மேற்படி கிரிக்கெட் வீரர் விருதை கடந்த 2013 இல் தனதாக்கிக்கொண்டார். மாதங்கள் கடந்த நிலையில் அவர் பங்களாதேஷில் 2013 இல் நடைபெற்றிருந்த 19 வயதிற்குட்டோருக்கான போட்டியில் இலங்கை அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருபது வயதான தினேஷ் சந்திமால் 46 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்தவப்படுத்தி 43.75 சராசரி ஓட்டங்களுடன் பத்து சதங்கள் மற்றும் 16 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 3,413 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதுவரை 139 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள சந்திமால் 39.62 சராசரி ஓட்ட எண்ணிக்கையுடன் மொத்தமாக 3,433 ஓட்டங்களை எடுத்துள்ளார். அத்துடன் மேற்படி போட்டிகளில், அவர் நான்கு சதங்களையும் 21 அரைச் சதங்களையும் குவித்துள்ளார்.

மேற்படி கௌரவ விருதினை தமக்குச் சொந்தமாக்கியிருந்த ஜாம்பவான்கள் பலரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே சந்திமாலும் கடந்த 2009 இல் ஒப்சேவர் - மொபிடெல் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை தனதாக்கிக்கொண்ட ஒருசில மாதங்களில் இலங்கை தேசிய அணியில் அரங்கேற்றம் கண்டார். பந்தை களத்தின் எல்லா மூலைகளுக்கும் நுட்பமாக அடிப்பதில் கைதேர்ந்த துடுப்பாட்ட வீரர்களுள் ஒருவராகவே சந்திமால் திகழ்கின்றார். அவர் இலங்கை அணியில் இடம்பிடித்த காலந்தொட்டே இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான உத்வேகம் பெற்ற நிலையில் அவர் துடுப்பாட்ட எல்லைக்கோட்டில் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தியுமுள்ளார்.

திரித்துவக் கல்லூரியின் அதிகளவில் வெற்றிவாகை சூடிய அணித் தலைவர்களுள் ஒருவரும் நம்பகத்தன்மை வாய்ந்த உயர் வரிசை துடுப்பாட்ட வீரருமான டிக்வெல்ல, முன்னைய பருவகாலத்தில் 1,000 க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருந்த நிலையில் ஒப்சேவர் - மொபிடெல் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் தனதாக்கிக்கொண்டதன் மூலம் தேசிய அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் விக்கெட் காப்பாளர், இடதுகை துடுப்பாட்ட வீரராவார்.

எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதியன்று தனது 25 ஆவது வயதைப் பூர்த்தியாக்கவுள்ள டிக்வெல்ல, கடந்த 2013 ,ல் நடைபெற்றிருந்த மாகாணங்களுக்கிடையிலான ஒரு நாள் சுற்றுப் போட்டியில் 91 பந்துகளுக்கு 104 ஓட்டங்களைக் குவித்திருந்த காலந்தொட்டு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியில் குறிப்பிடத்தக்க அளவில் இரசிகர்கள் மனங்களில் குடியிருந்தே வருகின்றார்.

மேற்படி ஒப்சேவர் – மொபிடெல் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதினை வென்ற ஒருசில மாதங்களில் அவர், 2013 ல் மேற்கொள்ளப்பட்ட இங்கிலாந்து சுற்றுலாவில் இலங்கை ‘ஏ’ அணிக்கு தெரிவு செய்யப்பட்டார். அன்று தொட்டு அவர் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் விக்கெட் காப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். ராஞ்சியில் கடந்த 2014 ல் நடைபெற்றிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வீரராகக் களமிறங்கிய டிக்வெல்ல, இதுவரை 36 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் ஐந்து அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 1,074 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்க்கது. அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது திரித்துவக் கல்லூரிச் சிங்கம் தெரிவிக்கையில், ஒப்சேவர் – மொபிடெல் பிரபல பாடசாலை வீரர் விருதைப்பெற்றமை பெரும் உற்சாகத்தை தனக்கு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2013 க்கான ஒப்சேவர் – மொபிடெல் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் பிரின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரிக்கென போட்டிகள் பலவற்றில் இன்னிங்ஸ் வெற்றிகளை அள்ளிக்கொடுத்த குசல் மெண்டிஸும் அபாரமாக விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் மேற்படி விருதை தனதாக்கிக்கொண்ட ஒரு சில மாதங்களின் பின்னர் அவர் 19 வயதிற்குட்பட்ட உலக இளைஞர் கிண்ணத்திற்கான இலங்கை அணித் தலைவனாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2016 ஜூன் 16ல் டப்ளின் நகரில் நடைபெற்ற அயர்லாந்திற்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 59 பந்துகளுக்கு எட்டு பவுண்டரிகளுடன் கூடிய அரைச் சதத்தினை (57 ஓட்டங்கள்) அவர் பதிவுசெய்தார். அன்று தொடக்கம் அவர் இலங்கை அணிக்காக 44 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 3,097 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதேசமயம் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள மெண்டிஸ் நான்கு சதங்கள் மற்றும் ஐந்து அரைச் சதங்களுடன் மொத்தமாக 1,,712 ஓட்டங்களைக் குவித்திருந்தார். அத்துடன் அண்மையில் டாக்காவில் நடந்துமுடிந்து பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரென்ற பெருமைக்குரியவராக அவர் திகழ்ந்திருந்தமையும் கவனிக்கத்தக்கது.


Add new comment

Or log in with...