நிதி மோசடி; ஜாலிய விக்ரமசூரியவுக்கு திறந்த பிடியாணை | தினகரன்

நிதி மோசடி; ஜாலிய விக்ரமசூரியவுக்கு திறந்த பிடியாணை

 

அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணையை வழங்கியுள்ளது.

இன்று (05) குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் இவ்வுத்தரவு வழங்கியது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்திற்காக கட்டடமொன்றை கொள்வனவு செய்வது தொடர்பில் ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்று இலட்சத்து 30 ஆயிரம் டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், FCID யினால் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், நீதிமன்ற அனுமதியுடன் பிணையில் விடுவிக்கப்பட்டு, வெளிநாடு சென்றிருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பில் அவரது மனைவி உட்பட நால்வர் அவருக்கு சரீரப் பிணை வழங்கியிருந்தனர்.

அதன் அடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி, குறித்த வழக்கு தொடர்பில் அவரது மனைவி உட்பட நால்வருக்கு நீதிமன்றில் முன்னலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...