எல்பிட்டிய பி.ச. தேர்தலுக்கு எதிரான மனு ஏப். 03 இல் விசாரணை | தினகரன்

எல்பிட்டிய பி.ச. தேர்தலுக்கு எதிரான மனு ஏப். 03 இல் விசாரணை


தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 03 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (15) உச்ச நீதிமன்றில் குறித்த மனு எடுத்துக் கொண்ட போது நீதிமன்றம் இதனை அறிவித்தது.

அத்துடன், குறித்த தினத்தில் பிரதிவாதிகள் தங்கள் எதிர்ப்பை முன்வைக்கலாம் என மன்று இதன்போது அறிவித்திருந்தது.

குறித்த பிரதேச சபை தேர்தல் தொடர்பில் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணியினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...