சிரியா மீது போர் தொடுக்க பிரான்ஸ் கடும் எச்சரிக்கை | தினகரன்

சிரியா மீது போர் தொடுக்க பிரான்ஸ் கடும் எச்சரிக்கை

 

சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை அரசுப் படைகள் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது.

பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு தடை செய்த இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஜனவரி தொடக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் பகுதிகளில் 6 முறை குளோரின் தாக்குதல்கள் நடந்ததில் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இது பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தடை செய்யப்பட்ட குளோரின் போன்ற இரசாயன ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக சிரிய அரசு பயன்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டு ஆதாரம் கிடைத்தால், நாங்கள் சிரியா மீது போர் தொடுப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Add new comment

Or log in with...