தென்னாபிரிக்க அரசில் செல்வாக்கு: குப்தா குடும்ப வீட்டில் சோதனை | தினகரன்

தென்னாபிரிக்க அரசில் செல்வாக்கு: குப்தா குடும்ப வீட்டில் சோதனை

தென்னாபிரிக்க அரசில் செல்வாக்கு செலுத்திய விசாரணையின் ஓர் அங்கமாக சர்ச்சைக்குரிய குப்தா குடும்ப வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஜகப் சுமாவின் நட்பை பயன்படுத்தி இந்தியாவில் பிறந்த செல்வந்த குப்தா குடும்பம் அரசை தன்னகப்படுத்த முயன்றதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனினும் இதனை குப்தா குடும்பத்தினர் மற்றும் சுமா இரு தரப்பும் நிராகரிக்கின்றனர்.

இந்நிலையில் சுமா பதவி விலகுவதற்கு தனது சொந்த கட்சியில் இருந்து அழுத்தம் வருவதற்கு குப்தாக்களுடனான தொடர்பும் ஒரு காரணமாகும்.

கடந்த டிசம்பரில் சுமாவுக்கு பதில் ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸின் தலைவராக சிறில் ரமபோசா தேர்வு செய்யப்பட்டார். அவர் தற்போது சுமாவை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக கோரியுள்ளார்.

ஆபிரிக்காவில் பல வர்த்தகங்களிலும் ஈடுபட்டு வரும் குப்தா குடும்பம், சுமாவுடனான நட்பை பயன்படுத்தி பல மில்லியன் டொலர் பெறுமதியான அரச ஒப்பந்தங்களை பெற்றதாகவும் அரசில் செல்வாக்கு செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜொஹன்னஸ்பர்க் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் இருக்கும் குப்தாவின் மதில் சுவர் கொண்ட வளாகத்தில் புதன் (நேற்று) காலை சோதனை செய்யப்பட்டதை தென்னாபிரிக்காவின் முன்னுரிமை குற்றப்பிரிவு உறுதி செய்தது. 


Add new comment

Or log in with...