தென்ஆபிரிக்க 20 ஓவர் அணிக்கு டுமினி தலைவர் | தினகரன்

தென்ஆபிரிக்க 20 ஓவர் அணிக்கு டுமினி தலைவர்

 

இந்தியாவுக்கு எதிரான 20 போட்டியில் தென் ஆபிரிக்கா அணி தலைவராக டுமினி நியமிக்கப்பட்டு இருக்கிறார்

தென்ஆபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் நிறைவடைந்ததும் அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி மோத உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி எதிர்வரும் 18-ம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது.

20 ஓவர் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. விரலில் ஏற்பட்ட காயத்தால் தலைவர் பாப் டு பிளிஸ்சிஸ் ஏற்கனவே விலகி விட்டார். அவருக்கு பதிலாக டுமினி தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிறிஸ்டியான் ஜோங்கர், ஜூனியர் டாலா, ஹென்ரிச் கிளாசென் ஆகிய புதுமுகங்களும் தேர்வாகி உள்ளனர்.

ஒரு நாள் தொடரின் பொறுப்பு தலைவர் மார்க்ராம், அம்லா, இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்ஆபிரிக்க அணி வருமாறு:-

டுமினி (தலைவர் ), பெஹர்டைன், ஜூனியர் டாலா, டிவில்லியர்ஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியான் ஜோங்கர், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பேட்டர்சன், ஆரோன் பாங்கிசோ, பெலக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, ஜான் ஸ்மட்ஸ். 


Add new comment

Or log in with...