றோயல் ₋ -கேட்வே கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி | தினகரன்

றோயல் ₋ -கேட்வே கல்லூரிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி

 

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கேட்வே கல்லூரிக்குமிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, ஹென்றி பேதிரிஸ் மைதான கூடைப்பந்து அரங்கில் நடைபெறும்.

கடந்த வாரம் கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு இடம்பெற்றது. உத்தியோகபூர்வ கிண்ணமும் காட்சிப்படுத்தப்பட்டது.

இங்கு றோயல் கல்லூரி அதிபர் அபேரட்ன கருத்து தெரிவிக்கையில், இக்கல்லூரியின் மற்றுமொரு பிரதான பந்தயமாக இந்த கூடைபந்து விளங்கும். கேட் வே கல்லூரியின் தலைவர் டொக்டர் ஹர்ஷா அலஸ் கருத்து தெரிவிக்கையில், ஒரு முன்னணி அரசாங்க பாடசாலை முதன் முதலில் ஒரு சர்வதேச பாடசாலையுடன் இணைந்து கூடைப்பந்தாட்ட போட்டியை நடத்துவது பெருமை மிக்கதும் சரித்திர முக்கியத்துவமிக்கதுமாகும் என்றார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், எதிர்வரும் காலங்களில் இந்த பிரதான பந்தயம் அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டனர்.

இரு கல்லூரியின் கூடைபந்தாட்ட அணியின் தலைவர்கள் வைபவ ரீதியாக சவால் கிண்ணத்தை பொறுப்பேற்று காட்சிப்படுத்தினர்.

அத்துடன், கேட் வே கல்லூரியில் மகளிரும் கல்வி கற்பதால் பிஷாப் கல்லூரி மகளீர் அணிக்கும் கேட் வே மகளீர் அணிக்குமிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி அன்றைய தினம் இடம்பெறும். இவ்விரு அணிகளினதும் தலைவிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இந்த போட்டிக்கான அனுசரணையை அவுஸ்திரேலிய மொனஷ் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.

போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு “அலஸ் – குணசேகர கிண்ணம்” வழங்கப்படவுள்ளது. இந்த இரு நபர்களும் பிரதான பாடசாலையின் முக்கியமானவர்கள் அத்துடன் காலஞ்சென்ற ஆர். ஐ. ரி. அலஸ் றோயல் கல்லூரியிலும் ஆசிரியராகவும், டி. எஸ். சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபக அதிபராகவும் கல்வியமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றினார். அத்துடன் கேட் வே கல்லூரியின் ஸ்தாபகருமாவார். காலஞ்சென்ற ஈ. சி. குணசேகர றோயல் கல்லூரியின் பிரதி அதிபராக நீண்டகாலம் பணியாற்றியவர். இலங்கை பாடசாலைக்கான கூடைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(போல் வில்சன்) 


Add new comment

Or log in with...