லசந்த கொலை சாட்சியங்களை மறைத்தார்; DIG பிரசன்ன கைது | தினகரன்

லசந்த கொலை சாட்சியங்களை மறைத்தார்; DIG பிரசன்ன கைது

 

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளைக்கு அமைவாக, அப்போது மேல் மாகாணம் தென் பிரிவு, கல்கிஸ்ஸை பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த, ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று (13) இரவு கைது செய்யப்பட்ட அவர், இன்றைய தினம் (14) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி, கல்கிஸ்ஸை, அத்திடிய பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில, அவரது காரினுள் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...