அரசாங்கத்தின் அர்த்தம் நிறைந்த நடவடிக்ைககள் | தினகரன்

அரசாங்கத்தின் அர்த்தம் நிறைந்த நடவடிக்ைககள்

 

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி குறித்த ஆணைக்குழு அறிக்கை மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த ஜனதிபதி ஆணைக்குழு அறிக்கை ஆகியவை மீதான ஒத்திவைப்பு விவாதத்தை பாராளுமன்றத்தில் அண்மையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை சபையில் முன்வைத்திருந்தார். அதாவது, பாரதூரமான குற்றங்களைப் புரிந்ததன் பேரில் குற்றவாளிகளாகக் காணப்படுவோரின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு அரசியலமைப்பின் பிரிவு 81 ஐ திருத்தியமைப்பதற்கான ஆதரவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்குமா என்பதே அந்த விடயமாகும்.

எவ்வாறிருப்பினும், மேற்படி விவாதத்தில் இணைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரதும் குடியியல் உரிமைகளைப் பறித்தெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென அடித்துக் கூறியிருந்தனர்.

மேற்படி ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொறடா அநுரகுமார திசாநாயக்க, ஊழல் நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளாகக் காணப்படுவோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவதனைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்த முடியுமெனவும் ஊழல்மிக்க அரசியல்வாதிகள் அற்ற பராளுமன்றத்தை உறுதிப்படுத்துவதற்கான அத்தகைய முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்குமெனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

எது எப்படியிருந்தபோதிலும், தாங்கள் எவரது கைகளிலும் பூனையின் பாதமாக இருக்கப்போவதில்லையென தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷவினதும் அல்லது வேறெவரினதும் குடியுரிமைகளைப் பறிப்பது போன்ற அரசியல் மோகினி வேட்டைகளுக்கு தனது கட்சி ஆதரவளிக்கப் போவதில்லையெனவும் சூளுரைத்திருந்தார்.

வழக்கு விசாரணைகளை நடத்தி, தண்டனை வழங்கப்பட்ட வரலாறொன்றை இந்தப் பாராளுமன்றம் கொண்டுள்ள போதிலும், அது இவ்வாறான நடவடிக்கைகளுக்கான இடமல்ல என்பதை திசாநாயக்க சுட்டிக்காட்டினார். முன்னள் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பாராளுமன்றத்திற்கு எவ்வாறு அழைத்து வரப்பட்டு, விசாரணையொன்று நடத்தப்பட்டு பதவியின்னும் நீக்கப்பட்டிருந்தமையை உதாரணமாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்தகைய சித்து விளையாட்டுக்களைப் பார்க்க வேண்டிய தேவை தங்களுக்கு கிடையாதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அவர் இது குறித்து தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டு மக்களின் வாழ்வியல் கோலத்தில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பிணைமுறி மோசடி குறித்து நாட்டில் பெரிய விவாதமொன்று நடைபெற்று வருகின்றது. ஆயினும் இதுபற்றி எதிர்பார்க்கப்பட்ட அளவில் விவாதிப்படவில்லை.

முன்னைய அரசினால் மேற்கொள்ளப்பட்டிருந்த மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றி கடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின் போது பெரிதாக குரலெழுப்பப்பட்டிருந்தது. ஆயினும், உண்மையில் நடந்ததென்ன? குற்றமிழைத்தோரைக் கூண்டில் ஏற்றுவதற்குப் பதிலாக, புதிய அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கவே முணைந்து வருகின்றது. இந்த மோசடிகளின் அசல், அடையாளமாகவே திறைசேரி பிணைமுறி மோசடி அமைந்துள்ளது. இந்த மோசடி குறித்து அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் அர்த்தபுஷ்டியானவையாகவுள்ளன எனவும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

கடந்த தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, அரசாங்க மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்த வழிசமைக்கும் வகையில் மேற்படி இரண்டு ஆணைக்குழு அறிக்கைகள் மீதான குறிப்பாக, பிணைமுறி விவகாரம் மீதான விவாதத்தை நடத்தும் பொருட்டு கடந்த 6 ஆம் திகதியன்று பாரளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரைக் கேட்டிருந்தார். சபையின் கௌரவத்தையும் மரியாதையையும் காப்பாற்றும் பொருட்டு அரசாங்கம் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் ஒத்திவைப்பு விவாதத்தை தொடர்ந்தும் நடாத்துவதற்கு இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உதித்த குமாரசிங்க


Add new comment

Or log in with...