சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு | தினகரன்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு

 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் மூவர் கொன்ஸ்டன்டினோஸ் மொர்டோபொலோஸ் தலைமையில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தனர்.

இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியின் பணிமனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் பணிகளை விஸ்தரிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இராணுவத்துடன் இணைந்து ஆற்றிய சேவையை கௌரவித்து மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.(ஸ) 


Add new comment

Or log in with...