ஜனாதிபதி, பிரதமர் இணைந்து செல்வதே எனது எதிர்பார்ப்பு | தினகரன்

ஜனாதிபதி, பிரதமர் இணைந்து செல்வதே எனது எதிர்பார்ப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களும் இணைந்து செல்வதே தனது எதிர்பார்ப்பு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளையடுத்து தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நி​ைலயைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவை அடுத்த பிரதமராக நியமிக்க வேண்டும் என வெளிவரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

பிரதமர் பதவியை தான் கேட்கவில்லை என்றும், தலைவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே தனது பிரார்த்தனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் . தேசிய அரசாங்கத்திற்குள் தற்போது பிரச்சினை இருக்கின்றதே என்று ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், அது சம்பந்தமாக தமக்குத் தெரியாது என்றும், தான் சபாநாயகர் என்பதால் நடுநிலையாகவே செயல்படுவதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...