ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பு | தினகரன்

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்பு

 

இலங்கை அரசின் புதிய சட்டத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் படகுகளுக்கு 17 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை இலங்கை அரசு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ராமேஸ்வரம் மற்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் போஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தின் முடிவில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 136 பேரை விடுதலை செய்ய வேண்டும், 175 படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (14-ந் திகதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்றுக்காலை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் தொடங்கினர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. கோரிக்கையை வலியுறுத்தி நாளை 16-ம் திகதி ராமநாதபுரம், நாகப்பட்டினம் உட்பட 6 மாவட்ட மீனவர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தையும் முற்றுகையிடுகின்றனர். 


Add new comment

Or log in with...