பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் குவைட் செல்ல முழு தடை | தினகரன்

பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் குவைட் செல்ல முழு தடை

பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் குவைட்டுக்குச் சென்று பணியாற்ற முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரொட்ரீகோ டுட்டார்ட்டே உத்தரவின் பேரில் பிலிப்பைன்ஸ் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

குவைட்டில் உள்ள கைவிடப்பட்ட குடியிருப்பில் இருந்த குளிர்சாதன பெட்டியில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் குவைட் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது அது முழுமையான தடையாக மாற்றப்பட்டுள்ளது.

குவைட்டில், பிலிப்பைன்ஸ் குடிமக்கள் வன்முறைக்கு ஆளாவதும், அவர்களில் சிலர் உயிரிழந்திருப்பதும் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து, குவைட்டிலுள்ள பிலிப்பைன்ஸ் ஊழியர்கள் நாடு திரும்ப விரும்பினால் இலவச விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஜனாதிபதி டுடார்ட்டே கூறினார்.

அடுத்த 72 மணி நேரத்தில் இலவச விமானச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் அவர். 


Add new comment

Or log in with...