சிங்கத்திற்கு இரையான சிங்க வேட்டைக்காரர் | தினகரன்

சிங்கத்திற்கு இரையான சிங்க வேட்டைக்காரர்

சிங்கங்களை வேட்டையாடும் சந்தேக நபர் ஒருவர் தென்னாபிரிக்காவின் க்ருங்கா தேசிய பூங்காவுக்கு அருகில் சிங்கங்களுக்கு இரையாகியுள்ளார். இந்த நபரின் சில உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

“பூங்காவில் சிங்கங்களை வேட்டையாட சென்றபோது இந்த சட்ட விரோத வேட்டைக்காரர் தாக்கப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது” என்று போலிஸ் பேச்சாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார். “கிட்டத்தட்ட அவரது உடல் முழுவதையும் சாப்பிட்டிருக்கும் அவை, தலை மற்றும் சில பாகங்களை மாத்திரம் விட்டுச் சென்றுள்ளன” என்றும் அவர் கூறினார். எனினும் இந்த வேட்டைக்காரரின் அடையாளத்தை பொலிஸ் இன்னும் வெளியிடவில்லை. உடல் பாகங்களுக்கு அருகில் குண்டு நிரப்பப்பட்ட வேட்டை துப்பாக்கி ஒன்று மற்றும் வெடிபொருட்களும் இருந்ததாக பார்த்தவர் ஒருவர் தென்னாபிரிக்க இணையதளம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

Or log in with...