மூதூர் உமர் பாறூக் வித்தியலயத்தில் இல்லவிளையாட்டுப் போட்டி | தினகரன்

மூதூர் உமர் பாறூக் வித்தியலயத்தில் இல்லவிளையாட்டுப் போட்டி

மூதூர் தி/உமர் பாறூக் வித்தியாலயத்தின் 10 ஆண்டு பூர்த்தி நிறைவை முன்னிட்டு இவ்வாண்டுக்காக நடாத்தப்படும் மாபெரும் இல்ல விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை(15) பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் எஸ். கஸ்ஸாலி தலைமையில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஆதரவுடன் நடைபெறும் இப்போட்டியில் ஹைபர் இல்லம், ஹிறா இல்லம், கூபா இல்லங்கள் பங்குகொள்கின்றன. இப்போட்டி நிகழ்சிக்கு பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஹாசீம் கலந்துகொள்கின்றார்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.எம். லாபீர்,பாடசாலை மேம்பாட்டு நிகழ்சி திட்ட இணைப்பாளரும், ஆசிரிய ஆலோசகருமான ஏ.எல். ஜவாகீர் பாடசாலை அதிபர்கள்,சமூக நிறுவனங்களின் தலைவர்கள் உட்படபெருந் திரளான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

மூதூர் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...