பாசில் மரீஜா பரிசு வழங்கி கௌரவிப்பு | தினகரன்

பாசில் மரீஜா பரிசு வழங்கி கௌரவிப்பு

இலங்கை றகர் அணியின் பிரபல வீரரான முன்னாள் தேசிய அணித் தலைவரும் முன்னாள் கண்டி அணித் தலைவருமான பாசில் மரீஜா டயலொக் கேடய இறுதிப் போட்டியின் போது பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டாரர். (11)

கடந்த இரு தசாப்த காலமாக இவர் கண்டி அணிக்கு மட்டுமே விளையாடியுள்ளார்.

அதே நேரம் இலங்கை தேசிய றகர் அணி, அணிக்கு ஏழுபேர்கொண்ட றகர் அணி போன்ற வற்றுக்கு பல முறை தலைமை தாங்கி இலங்கைக்கு புகழைப் பெற்றுக் கொடுத்தவர் மட்டுமல்லாது இவர் சிறந்த றகர் வீரராகக் கணிக்கப்பட்டு வந்தார்.

கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி பழைய மாணவரான அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்து தற்போது ஒரு குழந்தைக்கும் தந்தையான நிலையில் அவர் தனது கைக்குழந்தையுடன் பரிசைப் பெற்றுக் கொண்டார்.

அண்மைக் காலமாக பல்வேறு சர்சைகளில் விமர்சிக்கப்பட்டு வந்த றகர் ரசிகையும் காலம் சென்ற பிரபல திரைப்பட நடிகர் காமினி பொன்சேக்காவின் பேத்தியுமான யசாரா அபேநாயக்காவை இவர் கரம் பிடித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(அக்குறணை குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...