ஶ்ரீ லங்கன் விமான சேவை, ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கன் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் கடந்த 2006 ஜனவரி 06 முதல் 2018 ஜனவரி 31 வரையான காலப் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மற்றும் சோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமரப்பிக்கும் பொருட்டு, நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இன்று (14) நியமனம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
தலைவர்
- அனில் குணரத்ன
(ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி)
உறுப்பினர்கள்
- ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர
(ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிபதி)
- பியசேன ரணசிங்க
(ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி)
- எம்.டி.ஏ. ஹெரால்ட்
(ஓய்வு பெற்ற பிரதி கணக்காய்வாளர்)
- திருமதி டப்ளியூ.ஜே.கே. கீகனகே
(இலங்கை கணக்கியல் மற்றும் கணக்காய்வு தர கண்காணிப்பு சபை பணிப்பாளர் நாயகம்)
Add new comment