கிராண்ட்பாஸ் கட்டட இடிபாடுகளுக்குள் 07 சடலம் மீட்பு (UPDATE) | தினகரன்

கிராண்ட்பாஸ் கட்டட இடிபாடுகளுக்குள் 07 சடலம் மீட்பு (UPDATE)

 

குறித்த சம்பவத்தை அடுத்து, கிராண்ட்பாஸ் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதிக்கு பார்வையிட வருவதை தவிர்க்குமாறும் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கிராண்ட்பாஸ் கட்டட இடிவுக்குள் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 07 ஆக உயர்வடைந்துள்ளது.

இதில் 04 ஆண்கள் மற்றும் 03 பெண்கள் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர். இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தேயிலை களஞ்சியம் இடிந்து இருவர் பேர் பலி (பி.ப. 4.12)

கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள கட்டடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (14) பிற்பகல் 3.15 மணியளவில் கிராண்ட்பாஸ், பாபாபுள்ளே பிரதேசத்திலுள்ள தேயிலை களஞ்சியப்படுத்தப்பட்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்துள்ளதோடு, அதிலிருந்த இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயத்திற்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பது குறித்து கிராண்ட்பாஸ் பொலிசார் மற்றும் அனர்த்த உதவி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 


Add new comment

Or log in with...