2020இல் மஹிந்த போட்டியிட்டால் தோல்வியடைவது உறுதி | தினகரன்

2020இல் மஹிந்த போட்டியிட்டால் தோல்வியடைவது உறுதி

முன்னாள் ஜனாதிபதி 2020 தேர்தலில் போட்டியிட்டால் அவர் தோல்வியடைவது உறுதி என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர்,கடந்த தேர்தல்களை விட அவர் குறைந்த வாக்குகளே பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பொதுஜன பெரமுன 44.65 வீதங்களை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஐ.தே.க, சு.க மற்றும் ஐ.ம.சு.மு என்பன 46.01 வீத வாக்குகளை பெற்றுள்ளன.

2015 தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு 47.58வாக்குகள் கிடைத்தன. அது தற்பொழுது 44.65 வாக்குகளாக குறைந்துள்ளன. 2005 தேர்தலில் அவர் 50.29 வாக்குகளை பெற்றார். தொடர்ச்சியாக அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் குறைந்து வருகிறது. 2015 இல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ​வேண்டும். திருடர்களுக்கு துரிதமாக தண்டனை வழங்க வேண்டும். கடந்த 3 வருடத்தில் 1.5 பில்லியன் முதலீடுகள் கிடைத்துள்ளன.

மொத்த வாக்குகளின் பிரகாரம் அரசாங்கம் இந்த தேர்தலில் தோல்வியடையவில்லை. கடந்த 2015 தேர்தலில் இ.தொ.கா மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கினாலும் அவர் தோல்வியடைந்தார்.அவருடன் புதிய கட்சிகள் எதுவும் இணையத் தயாராக இல்லை. 2020 தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட்டாலும் கடந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அவர் தோல்வி அடைவார். (பா) 


Add new comment

Or log in with...