கனடா பிரதமர் இந்தியா வருகை | தினகரன்

கனடா பிரதமர் இந்தியா வருகை

 

அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரும் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் உரையாற்றுகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரும் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடாவ் அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் உரையாற்றுகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடாவ் 6 நாள் பயணமாக இந்த மாதம் 17-ம் திகதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். 17-ம் திகதி டெல்லி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார் என அதிகாரிகள் கூறினர்.

மேலும், அமைச்சர்கள், தலைவர்களை சந்திக்க இருக்கும் அவர் 23-ம் திகதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, பொருளாதாரக் கொள்கை, கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவற்றைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் 19-ம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ருடாவ் உரையாற்றுகிறார். மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாட்டு பிரதமர் ஒருவர் இங்கு வந்து உரையாற்றுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது என மேலாண்மை நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 


Add new comment

Or log in with...