இந்தியாவில் 11 முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் | தினகரன்

இந்தியாவில் 11 முதலமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

மாநில முதலமைச்சர்கள் விவரங்கள் குறித்து நடத்திய ஆய்வில் 11 முதலமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மொத்தம் 31 மாநில முதலமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் கல்வி தகுதி என்ன? இவர்கள் பெயரில் எவ்வளவு சொத்துகள் உள்ளது? இவர்கள் மீது போலீசில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன? என்பன போன்றவை குறித்து ஜனநாயக சீர்திருத்த கழகம் எனும் அமைப்பு ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வில் சில முதலமைச்சர்கள் பற்றிய ஆச்சரிய தகவல்களும், சில அதிர்ச்சித் தகவல்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக 31 முதலமைச்சர்கள் 11 முதலமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

கிரிமினல் பின்னணி உள்ள முதலமைச்சர்கள் மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் மீது 22 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 3 வழக்குகள் மிகக் கடுமையான கிரிமினல் வழக்குகளாகும்.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கிரிமினல் குற்ற முதலமைச்சர்களில் 2-வது இடத்தில் இருக்கிறார்.

அவர் மீது 11 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 குற்ற வழக்குகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

ஜர்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் 8 குற்ற வழக்குகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர்சிங் 4 வழக்குகளுடன் 5-வது இடத்திலும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது 4 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் 2 கிரிமினல் வழக்குகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 2 கிரிமினல் வழக்குகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் தலா ஒரு கிரிமினல் வழக்குகளுடன் 10 மற்றும் 11-வது இடங்களில் உள்ளனர்.

முதலமைச்சர்கள் கல்வித் தகுதியும் திருப்தியாக இல்லை. 31 முதலமைச்சர்களில் 10 சதவீதம் பேர் 12-ம் வகுப்பு மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 39 சதவீத முதலமைச்சர்கள் பட்டதாரிகள்.

32 சதவீதம் பேர் தொழில் சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள். 16 சதவீதம் முதலமைச்சர்கள் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 சதவீத முதலமைச்சர்கள்தான் ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். 


Add new comment

Or log in with...