நல்லாட்சி அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழு, தனது முடிவை இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று (13) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, நல்லாட்சி அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களைக் கொண்ட குறித்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 05 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 05 உறுப்பினர்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இது தொடர்பில் இன்று (14) கூடுகின்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆராயவுள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டதற்கமைய, தற்பொழுது அமைச்சரவை கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
மாகாண சபை தேர்தலின் பின்னர், அமைச்சரவை கூடுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment