உலகின் உயரமான நட்சத்திர ஹோட்டல் டுபாயில் திறப்பு | தினகரன்

உலகின் உயரமான நட்சத்திர ஹோட்டல் டுபாயில் திறப்பு

உலகின் மிக உயரமான நட்சத்திர ஹோட்டல் டுபாயில் திறக்கப்பட்டுள்ளது. கெவோரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல், உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் டுபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீற்றர் கூடுதலான உயரம் உடையது.

லண்டனின் பிக் பென் கடிகாரம் அல்லது பாரிசின் உலகப் புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தை விடவும் இது பலமடங்கு உயரமானது. 2008ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஹோட்டல், தற்போது திறக்கப்பட்டுள்ளது.

75 மாடிகளுடன் 528 விருந்தினர் அறைகளை இது கொண்டுள்ளது. இதன் உயரம் 1,165 அடி கொண்ட மாரியட் மார்க்யூஸ் ஹோட்டலை விட ஒருமீற்றர் கூடுதலானது. நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த சொகுசு ஹோட்டலில் உள்ளன. 


Add new comment

Or log in with...