2050இல் சூரிய வெப்பம் குறைவதாக கணிப்பு | தினகரன்

2050இல் சூரிய வெப்பம் குறைவதாக கணிப்பு

சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு 2050ஆம் ஆண்டளவில் குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுவதால் புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

17ஆம் நூற்றாண்டின் மத்தியில் இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு, தேம்ஸ் நதி அடிக்கடி உறைந்ததாக கூறப்படுகிறது. இதேகாலகட்டத்தில் பால்டிக் கடல் உறைந்ததால், கடற்பரப்பின் மீது சுவீடன் படைகள் அணிவகுத்துச் சென்று 1658ஆம் ஆண்டு டென்மார்க்கின் மீது படையெடுத்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

இந்நிலையில், சூரியனில் ஏற்படும் ஆற்றல் சுழற்சிகளின் அடிப்படையில், 2050ஆம் ஆண்டளவில் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது புவி வெப்பமயமாதல் பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம் என சில அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். 


Add new comment

Or log in with...