தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் | தினகரன்

தென்னாபிரிக்க அணிக்கு அபராதம்

இந்தியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் தாமதமாகப் பந்துவீசியதாக தென்னாபிரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அவகாசத்தை தாண்டிய வகையில் ஒரு ஓவரை வீசியதாக ஐ.சி.சி போட்டி மத்தியஸ்தரான அன்டி பைகிராப்ட் தென்னாபிரிக்க தரப்புக்கு அபராதம் விதித்துள்ளார்.

விதிகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டிய வகையில் வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் அபராதம் விதிகப்படும். இதில் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 10 சதவீதமும், அணித்தலைவருக்கு 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்படும். இதன்படி, தற்போது தென்னாபிரிக்க தரப்பு ஒரு ஓவரை தாமதமாக வீசியதால், வீரர்களுக்கு 10 வீதமும், அணித்தலைவர் எய்டன் மார்க்ரமுக்கு 20 வீதமும் போட்டி ஊதியத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. 


Add new comment

Or log in with...