ஹொங்கொங் டி20 இறுதியில் தோற்ற சங்கக்காரவின் அணி | தினகரன்

ஹொங்கொங் டி20 இறுதியில் தோற்ற சங்கக்காரவின் அணி

ஹொங்கொங் டி20 பிளிட்ஸ் போட்டித் தொடரில் குமார் சங்கக்கார தலைமையிலான கெலக்சி கிளடியேட்டர்ஸ் லாண்டவ் அணி, இறுதிப் போட்டியில் ஹங் ஹோம் ஜகுவார்ஸ் அணியிடம் 6 ஓட்டங்களால் போராடி தோற்றது. இந்த போட்டியில் சங்கக்கார தனது துடுப்பாட்டத்தின் மூலம் தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வந்ததோடு இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஹொங்கொங்கில் ஐ.பி.எல். பாணியில் குறுகிய காலத்தில் நடத்தப்பட்ட ஹொங்கொங் டி20 பிளிட்ஸ் தொடரில் பல சர்வதேச வீரர்களும் இணைக்கப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மொங் கொக்கில் நடந்த இறுதிப் போட்டியில் 201 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தில் சங்கக்காரவின் கெலக்சி கிளடியேட்டர்ஸ் 194 ஓட்டங்கள் பெற்று தோல்வியை சந்தித்தது.

இதில் சங்கக்கார 76 ஓட்டங்களை விளாசியபோதும் அந்த ஆட்டம் வீணானது.

பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் நடத்தப்பட்ட இந்த தொடரில் சங்கக்கார ஐந்து போட்டிகளிலும் 311 ஓட்டங்களை பெற்று தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவராக உள்ளார். 


Add new comment

Or log in with...