சதி செய்து ஆட்சியமைக்கும் தேவை எனக்குக் கிடையாது | தினகரன்

சதி செய்து ஆட்சியமைக்கும் தேவை எனக்குக் கிடையாது

-பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தல் நடத்த வேண்டும்

எனக்கு சதி செய்து, தலைகளை மாற்றி ஆட்சியமைக்கும் தேவை கிடையாது. மக்கள் தந்த ஆணையை மதித்து அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலினூடாக புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி த் தேர்தல் வெற்றியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வௌியிட்ட அவர் 232 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற பொதுஜன பொரமுனவுக்கு முடிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அரசாங்கம் மேற்கொள்ளும் பலிவாங்கல்கள் மற்றும் மக்கள் மீதான வரிச் சுமை என்பன காரணமாகவே இந்த தேர்தல் முடிவுகள் இவ்வாறு அமைந்ததாகவும் அவர் கூறினார்.

இது உள்ளூராட்சி சபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வது என்பதை தேசிய தேர்தலையோ சர்வஜனவாக் கெடுப்பையோ ஒத்ததாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வௌியிட்ட அவர்,

பிரதான கட்சிகளை ஓரங்கட்டி புதிய கட்சி மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த வாக்குகள் மிகவும் முக்கியமானது. எமது ஆதரவு பெற்ற மகரகம,மஹியங்கனை,பேருவளை மற்றும் திரப்பனை சுயேச்சைக் குழுக்கள் வெற்றியீட்டியுள்ளன. மொத்த உள்ளூராட்சி சபைகளில் 73 வீதமானவற்றறை பொது ஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.

நாட்டை துண்டாடுவதற்கும் நிவாரணங்களை ரத்து செய்ததற்கும் பலிவாங்கல்களுக்கும் படைவீரர் மீதான பலிவாங்கல்களுக்கும் எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

2015 தேர்தலில் வென்றது போல சேறு பூசி வெல்ல அரசாங்கம் முயன்றது.

இந்த தேர்தல் முறையில் சிக்கல் இருக்கிறது. பெறுபேறுகளை வௌியிடுவதிலும் குழப்பம் ஏற்பட்டது. சில முடிவுகளில் சிறு சிறு குழப்பங்கள் இருக்கின்றன. நடுஇரவில் சட்டம் நிறைவேற்றி முன்னெடுக்கப்பட்ட இந்த தேர்தல் முறையின் பலனை பின்னர் உணரலாம்.பெசில்,தினேஷ் ஆகியோர் தயாரித்த உள்ளூராட்சி தேர்தல் முறையின் கீழ் 4 ஆயிரம் உறுப்பினர்கள் தான் தெரிவாக இருந்தனர்.அதனை மாற்றி 8 ஆயிரம் உறுப்பினர்களை தெரிவு செய்யும் முறையை கொண்டுவந்துள்ளனர்.

நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பாராளுமன்ற தேர்தலை அவசரமாக நடத்துமாறு கோருகிறோம்.

இதற்கு 19 ஆவது திருத்தம் தடையாக இருப்பதால் இதனை மாற்ற பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். நாடு முகங்கொடுத்துள்ள ஸ்தீரமற்ற நிலையை மாற்றுவதற்கு பொதுத் தேர்தலை நடத்தி ஸ்தீரமான அரசை உருவாக்க இடமளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.(பா) 

 


Add new comment

Or log in with...