Thursday, March 28, 2024
Home » எகிப்து தூதரக ஏற்பாட்டில் பாரம்பரிய கண்காட்சி

எகிப்து தூதரக ஏற்பாட்டில் பாரம்பரிய கண்காட்சி

பிரதம அதிதியாக சாகல ரத்நாயக்க பங்கேற்பு

by damith
November 7, 2023 9:08 am 0 comment

கொழும்பிலுள்ள எகிப்து தூதரகம் இலங்கையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நோக்கில் “The Nine Provinces Bazaar II” கண்காட்சியொன்று கொழும்பு, சிட்டிசென்டரில் நவம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் மகேத் மொஸ்லே தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின் ஒன்பது மாகாணங்களைச்சேர்ந்த கைவினைஞர்கள், சிறு தொழில்முனைவோர், சிறப்புத்திறன் கொண்டோர் ஆகியோர் பங்குபற்றியதோடு விற்பனையகத்திற்கு பார்வையிட ஏராளமானோர் வருகை தந்தனர்.

இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க கலந்து கொண்டார். பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, மலேசியா, பாலஸ்தீனம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ருஸைக் பாரூக்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT