தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில் | தினகரன்

தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பட்டியல் உறுப்பினர்கள், பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விபரங்களை கட்சி செயலாளர்கள் அனுப்பிவைக்கும் பட்சத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தேர்தல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கு வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...