படகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது | தினகரன்


படகு மூலம் இந்தியா சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட நால்வர் கைது

 

சத்திர சிகிச்சை பிரசவத்திற்கு வந்ததாக வாக்குமூலம்

பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து  தனுஷ்கோடி சென்ற குடும்பத்தினரிடம் பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர்.

இன்று (08) அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி  இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து கண்ணாடியிலைப்படகில் வந்து இறங்கிய  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 09 மாத கர்ப்பிணி பெண் உட்பட நால்வரிடம் தமிழ்நாடு உளவுத்துறை, கியூபிரிவு சுங்கத்துறை மற்றும் பொலிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரனையில், மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோசன் (28) பெயின்ட் பூசும் வேலை செய்து வருவதாகவும் வருவாய் இன்றி கஷ்டத்தில் இருப்பதால், நேற்று வியாழன் (08) அதிகாலை தனது ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியான மேரிஸ்டெல்லா (23), தனது ஐந்து வயது பெண் குழந்தை ஜெஸ்மின் மற்றும் சகோதரர் ரீகன் உள்ளிட்ட நான்கு பேருடன் இலங்கை மன்னார் பகுதியில் கண்ணாடியிலைப்படகு ஒன்றில் ரூபா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனூஷ்கோடிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும், கடந்த 1990 இல் இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்த காலத்தில் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2011 இல் மண்டபம் அகதி முகாமிலுள்ள அரசு மருத்துவ மனையில் தனது மனைவிக்கு சத்திரசிகிச்சை செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

பின் கடந்த 2012 இல் கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

மீண்டும் தற்போது  பிரசவத்திற்க்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதோடு, ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

 


Add new comment

Or log in with...