அரசாங்கம் பதவி விலக வேண்டிய தேவை இல்லை | தினகரன்

அரசாங்கம் பதவி விலக வேண்டிய தேவை இல்லை

 

பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் விலகிச் செல்வதற்கோ எவ்வித தேவையும் இல்லை என, சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என சிலர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் குறைகளை சரி செய்து தொடர்ந்தும் இப்பயணித்தை கொண்டு செல்ல பிரதமரும் ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகும் கனவு அல்லது பொதுத்தேர்தலை நடாத்த கனவு காணுவோரின் கனவுகள் நிறைவேறாது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ, ஐக்கிய தேசியக்கட்சியோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பிரதமர் பதிவியை வழங்குவதற்கு இதுவரையில் ஆலோசனை முன்வைக்கவில்லை.

தற்போதைய அரசாங்கத்திற்கு 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணை வழங்கியுள்ளமை, ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கே ஆகும். இதனை தொடர்ந்து முன்னெடுப்பதில் சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

மக்கள் ஆணைக்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...