பூமிக்கு மிக நெருக்கமாக விண்கல் இன்று பயணம் | தினகரன்

பூமிக்கு மிக நெருக்கமாக விண்கல் இன்று பயணம்

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேலும் ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லவுள்ளது. 15 முதல் 40 மீற்றர் வரையிலான அளவு கொண்ட இந்த சிறிய விண்கல், பூமிக்கு 64,000 கி.மீ. தொலைவில் இன்று சனிக்கிழமை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2018 சி.பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல் பூமியைக் கடந்து செல்வதால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

முன்னதாக, பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றி வரும் நடுத்தர அளவு கொண்ட 2018 சி.சி என்ற விண்கல், வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பூமியை மிக நெருக்கத்தில் கடந்து சென்றதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்திருந்தது. 


Add new comment

Or log in with...