விண்வெளியில் பாதை தவறிய கார் வண்டி | தினகரன்

விண்வெளியில் பாதை தவறிய கார் வண்டி

 

அமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ரொக்கட் மூலம் விண்வெளிக்கு அனுப்பிய கார் பாதை மாறியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கேனவரலில் அமைந்துள்ள விண்வெளி நிலையத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன் ஹெவி ரொக்கட் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரொக்கட் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலேன் மஸ்கிற்கு சொந்தமான சிவப்பு நிற டெஸ்லா காரையும் சுமந்து சென்றுள்ளது.

இந்த கார் பூமி மற்றும் செவ்வாயின் சுற்றுப்பாதையில் வலம் வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உந்து சக்தியின் காரணமாக கார் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து நீண்ட தூரம் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Add new comment

Or log in with...