Thursday, March 28, 2024
Home » யாழில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

யாழில் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

by damith
November 7, 2023 8:31 am 0 comment

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு வடமாகாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

உலக சுகாதார நிறுவனம் வருடந்தோறும் நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை பிரகடனம் செய்து வருகின்றது. இலங்கையிலும் தற்போது இவ் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடைபெற்றுவருகின்றன.

அதன்பிரகாரம் வடமாகாணத்தில் வைத்தியர்களின் பங்குபற்றுதலில் இக்கருத்தரங்கு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் பல்வேறு வகையான மாற்றம் அடைகின்றன. இதனால் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதை கடினமாக்குகிறது.

இவை வழமையான Antibiotics களுக்கு எதிராக வளரும் ஆற்றலை பெறும் அபாயம் காணப்படுகிறது. இதன் விளைவாக நோய் பரவல், கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயம் அதிகரிக்கும். ஆகவே Antibiotics கட்டுப்பாட்டுடன் பாவிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

(யாழ். விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT