அதிக வயதில் முதலிடம் பிடிக்க பெடரருக்கு வாய்ப்பு | தினகரன்

அதிக வயதில் முதலிடம் பிடிக்க பெடரருக்கு வாய்ப்பு

சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் (வயது 36) டென்னிஸ் உலகில் அதிக வயதில் முதலிடத்தை பிடித்தவர் என சாதனை படைக்க எதிர்பார்த்துள்ளார்.

பெடரர் தற்போது ஆடவர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2ஆம் இடத்தில் இருப்பதோடு முதலிடத்தில் உள்ள ரபேல் நடாலை விட 155 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஏ.டி.பி் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் 180 புள்ளிகளைப் பெறுவார். இதனால் இலகுவாக முதலிடத்துக்கு முன்னேற முடியும்.

அண்மையில் நடந்து முடிந்த அவுஸ்திரேலிய ஓபனில் 6ஆவது முறையாக சம்பியன் பட்டம் வென்ற ரொஜர் பெடரர், அதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் கிண்ணங்களை வென்று சாதனைப் படைத்தார். கடைசியாக 2015இல் இந்த ரோட்டர்டாம் ஏ.டி.பி தொடரில் பெடரர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அமெரிக்க வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸி 33 வயது 131 நாட்கள் இருந்தபோது கடந்த 2003ஆம் ஆண்டில் தரவரிசையில் முதலிடம் பிடித்ததே இதுவரை சாதனையாக உள்ளது. 


Add new comment

Or log in with...