Friday, March 29, 2024
Home » பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ‘குறிஞ்சிச் சாரல்’ கலைநிகழ்ச்சி

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ‘குறிஞ்சிச் சாரல்’ கலைநிகழ்ச்சி

by damith
November 7, 2023 11:56 am 0 comment

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை பெருமையுடன் வழங்கும் 97 ஆவது குறிஞ்சிச் சாரல் நிகழ்வும் மலையக எழுத்தாளர் மு. சிவலிங்கத்துக்கு சங்கச் சான்றோர் விருது வழங்கும் வைபவமும் கண்டி இந்து கலாசார மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘எட்டுத்திக்கும் எங்கள் கலை’ என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவரும், தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவருமான பேராசிரியர் எஸ். பிரசாந்தன் மற்றும் 97வது செயற்குழுத் தலைவர் மு. வினோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக பிரதம நூலகர் ஆர். மகேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக முன்னாள் புவியியற்துறை தலைவர் பேராசிரியர் வை. நந்தகுமார், முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் துரை மனோகரன், முன்னாள் முகாமைத்துவ துறைத் தலைவர் வ. தர்மதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வரவேற்பு நடனம், குழுப்பாடல், கிராமிய நடனம், ஐவகை நிலங்களைக் குறிக்கும் நடனம், நாடகம் ஆகிய நிகழ்வுகளும் கண்டி திருத்துவக் கல்லூரியின் வில்லுப்பாட்டு, விஹாரமகாதேவி கல்லூரியின் நடனம், மோப்ரே கல்லூரியின் கர்நாடக இசை ஆகிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன

இதில் பேராதனை பல்கலைக் கழகத்தால் பெருமையுடன் வழங்கப்படும் சங்கச் சான்றோர் விருது இம்முறை மலையக எழுத்தாளர் மு. சிவலிங்கத்துக்கு வழங்கப்பட்டது.

(மாவத்தகம தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT