உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு | தினகரன்

உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு

 

நாடு முழுவதும் சராசாரியாக 60 வீத வாக்களிப்பு

இன்று (10) காலை 7.00 மணிக்கு ஆரம்பமான உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்குப்பதிவுகள், பிற்பகல் 4.00 மணியுடன் நிறைவடைந்துள்ளன.

நாடுமுழுவதிலும் சராசரியாக 60 சதவீத வாக்களிப்பு பதிவாகியிருப்பதோடு, பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை என, தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 70% வாக்களிப்பும், அம்பாறை, நுவரெலியா மாவட்டங்களில் 70%, கிளிநொச்சியில் 69%, வவுனியா 60%, யாழ்ப்பாணம் 47% வாக்களிப்பும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதுமுள்ள 24 மாநகர சபை, 41 நகர சபை  மற்றும் 275 பிரதேச சபை உள்ளிட்ட 340 சபைகளுக்கான வாக்களிப்பு, 13,374 தேர்தல் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றன.

இத்தேர்தலில் 4,903 வட்டாரங்களுக்கான 8,325 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 43 கட்சிகள் மற்றும் 222 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 57,095 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதம்
கொழும்பு 50%
ஹம்பாந்தோட்டை 70%
யாழ்ப்பாணம் 47%
மன்னார் 70%
கிளிநொச்சி 69%
வவுனியா 60%
நுவரெலியா 70%
பதுளை 65%
முல்லைத்தீவு 75%
கண்டி 67%
கம்பஹா 73%
மாத்தறை 64% 
ஹம்பாந்தோட்டை 65%
இரத்தினபுரி 77%
மொனராகலை 75% 
பொலன்னறுவை 68%
புத்தளம் 70%
கேகாலை 70%
அம்பாறை 70%
கம்பஹா 73%
களுத்துறை 75%
அனுராதபுரம் 75%
மாத்தளை 80%
காலி 75%

வாக்குகளை எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை, வாக்குப்பதிவு இடம்பெற்ற மத்திய நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணும் பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தினகரன் பேஸ்புக் மற்றும் இணையத்தளத்தில் நேரடியாக வழங்கப்படவுள்ளன.

உங்கள் கையடக்க தொலைபேசியில் SMS மூலம் தேர்தல் முடிவுகளை நேரடியாக பெற்றுக் கொள்ள REG <இடைவெளி> Thinakaran என டைப் செய்து 77000 எனும் இலக்கத்திற்கு அனுப்புங்கள். 

REG Thinakaran and SEND the SMS to 77000


Add new comment

Or log in with...