இளவரசி மகன் விவேக்கிற்கு அழைப்பாணை | தினகரன்

இளவரசி மகன் விவேக்கிற்கு அழைப்பாணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், இளவரசி மகன் விவேக்கிற்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்த கையோடு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்பலோ மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் என பலரிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இளவரசி மகன் விவேக்கிற்கும் டொக்டர் பாலாஜிக்கும் அழைப்பாணை அனுப்பியுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் கார் சாரமதி ஐயப்பனுக்கும் 2வது உதவியாளர் கார்த்திகேயனுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. எதிர்வரும் 13 அல்லது 14 ம் திகதி விவேக் மற்றும் பாலாஜி ஆஜராகவும் 12ம் திகதி ஐயப்பன் ஆஜராகவும் 15ம் திகதி கார்த்திகேயன் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...